search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் இன்ஸ்பெக்டர்"

    திருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய பா.ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு சாலைக்கடை பகுதியில் சில இளைஞர்கள், கடந்த 5-ந் தேதி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தாக்கி தகராறு செய்தனர்.

    அப்போது பா.ஜனதா முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் மகன் பிரகாஷ் (24) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் வந்த வாகனத்தையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்ட தலைக்காடு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (24) என்பவரை கைது செய்தனர். அவரை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். உடன் மற்றொரு சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் சென்றார்.

    அப்போது அங்கு வந்த பா.ஜனதா முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசன், போலீசார் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். தன் மகனை தாக்கிய சுபாஷ் சந்திர போசை அரிவாளால் வெட்ட முயன்றார்.

    இதை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தடுக்க முயன்ற போது அவரது வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ஜனதா பிரமுகர் கணேசனை கைது செய்தனர்.
    ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கக்கன் காலனியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 55). இவர், சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.

    அதன் அடிப்படையில் ஏட்டு ஆனந்தனுடன் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் ரோந்து பணிக்குச் சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் சின்னக்கட்டளை பகுதியில் சென்றனர்.

    அப்போது அங்கு 2 பேர் போர்வையால் உடலை மூடியபடி நிற்பதை பார்த்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் 2 பேரையும் தனித்தனியாக சப்-இன்ஸ்பெக்டர் மாயன் விசாரித்தார்.

    அந்த நேரத்தில் ஒருவன் திடீரென மாயனின் கழுத்தில் கத்தியால் குத்தினான். இதில் அவர் நிலைகுலைந்த நேரத்தில் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாயன், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து அவர் வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல்:

    வரதட்சணைக்காக மருமகளை வீட்டை விட்டு சப்-இன்ஸ்பெக்டர் விரட்டியதால் மனமுடைந்து வி‌ஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் என்பவருக்கும் கன்னிவாடி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த சுகந்தி (வயது 21) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ரமேஷ் வேலை இல்லாமல் இருந்ததால் அவர் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வாங்கி வருமாறு மாமனார் சுப்பிரமணி அவரை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

    இதனால் குழந்தை பிறந்தவுடன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் சுகந்தி வேறு ஒரு வாலிபருடன் பழகுவதாகவும் குற்றம் சாட்டினார். சம்பவத்தன்று சுகந்தி வீட்டுக்கு சென்ற சுப்பிரமணி மற்றும் ரமேஷ் வரதட்சணை ஏன் வாங்கி வரவில்லை? என சத்தம் போட்டுள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சுகந்தி வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வரதட்சணைக்காக போலீஸ் அதிகாரியே மருமகளை வீட்டை விட்டு விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி அருகே பெண் ஏட்டுவுடன் போலீஸ் நிலையத்தில் அத்துமீறி நடந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது, மிரட்டி பாலியலில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. #womanpolicemolestation
    திருச்சி

    திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 51). இவர் கடந்த 10-ந்தேதி இரவுப்பணியில் இருந்த போது அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் 32 வயதுள்ள பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தகவல் வந்தது. இந்த சம்பவம் நடந்த போது நேரில் பார்த்த உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் இதனை நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் ஏட்டும் போலீசில் புகார் செய்தார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக், எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பி ரமணியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். சம்பவம் நடந்தபோது இருவரும் பணியில் இருந்ததால் துறை ரீதிகயாவும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் உள்ள அந்த வீடியோவில் எஸ்.எஸ்.ஐ. காவல் நிலையத்திற்கு வந்தததும் பெண் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுபோல் பதிவாகியிருந்தது.

    ஆனால் பெண் ஏட்டு தன் இருக்கையை விட்டு எழும்பாமல் அமர்ந்தபடியே இருந்திருந்தார். இதனால் அவரின் சம்மதத்துடனேயே இது நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். புகார் அளித்த பெண் ஏட்டு மருத்துவ விடுப்பு பெற்றுக் கொண்டு விடுமுறையில் சென்று விட்டார்.

    டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் ஏட்டுவின் வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறிய தகவல்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் தெரிவிக்கப்பட்டது.
    பெண் ஏட்டு அளித்த தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. பாலசுப் பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல் என்ற 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். ஆனால் தன் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? அவரின் சம்மதத்துடன் தான் முத்தம் கொடுத்தேன் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் எதிராக புகார் ஏதும் செய்யாததால் பெண் போலீசின் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #womanpolicemolestation
    சாத்தூர் அருகே ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். #FakeSubInspector
    சாத்தூர்:

    சாத்தூரை அடுத்த படந்தால் அருகே தென்றல் நகரில் வசித்து வரும் பழனிசாமி என்பவரது மகன் கண்ணன்(வயது39). இவர் ரெயில்வேயில் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி சாத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

    இதனை அறிந்த படந்தால் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கண்ணன் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் நிதிநிறுவனத்தில் பணம் பெற்றவர்கள் ஏமாற்றிவிடாமல் இருக்க சப்-இன்ஸ்பெக்டர் என கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டை சோதனையிட்டதில் ரெயில்வே காவலர் உடை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் கண்ணன் ஆர்.பி.எப். என்று எழுதி இருந்ததும் தெரிய வந்தது. காவலர் உடையையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார், கண்ணனையும் கைது செய்தனர். அவரை சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக 3 கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்த சப்-கலெக்டரின் நடவடிக்கையை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    நாமக்கல்:

    திருப்பூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக 3 கிராம நிர்வாக அலுவலர்களை இடமாற்றம் செய்த சப்-கலெக்டரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நாமக்கல் வட்ட கிளை சார்பில் நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நாமக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார்.
    ×